TNDTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு !
TNDTE வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு !
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (TNDTE) ஆனது தற்போது Computer on Office Automation தேர்வு தேதி குறித்த தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு அட்டவணை வெளியீடு:
DTE எனும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் ஆனது தற்போது இந்த ஆண்டுக்கான Computer on Office Automation சான்றிதழ் பயிற்சிக்கான தேர்வினை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வானது Theory Exam மற்றும் Practical Exam என்று இரண்டு தேர்வுகளை தனித்தனியே வருகிற பிப்ரவரி – மார்ச் மாதம் (February – March 2022) நடைத்துவது வழக்கமாகும். இதனைத் தொடர்ந்து தற்போது இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த தேர்வு அட்டவணை ஒன்றை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த அட்டவணையில் Theory Exam மற்றும் Practical Exam என இரண்டு தேர்வுகளுக்கான தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் Theory Exam ஆனது 09.04.2022 ம் தேதி நடைபெற உள்ளது என்றும், Practical Exam ஆனது 10.04.2022 மற்றும் 11.04.2022 ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு நேரம் மற்றும் கூடுதல் தகவல்களை இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.