TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
TN TRB 9000+ காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.
ஆசிரியர் காலியிடங்கள்
தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தி வருகிறது. அதனடிப்படையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா வைரஸ் காரணமாக எந்த ஒரு துறையிலும் அரசு தேர்வுகள் நடத்தப் படாமலும், ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்பாமலும் இருந்தனர். அதனால் சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் மேற்படிப்பு படிப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை – UGC, AICTE அதிரடி உத்தரவு!
சட்டப்பேரவையில் நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 34 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 2022 – 23 ஆம் கல்வியாண்டில் 7,500 திறன் வகுப்பறைகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என தெரிவித்தார். இவற்றுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 15,000 இடங்கள் நிரப்பப்படும் என்றும் இவற்றில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 9,000 பேர் பணிக்கு நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவித்தார்.
ExamsDaily Mobile App Download
மேலும் 7 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான பள்ளிகள் சென்னையில் அமைக்கப்படும் என்றும், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சிறப்பாக செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என தெரிவித்த அன்பில் மகேஷ் அவர்கள் மாணவர்களின் உடல் நலன் காக்க சிறப்பு பயிற்சிகள், மனநலம் காக்க விழிப்புணர்வு வாரம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட 34 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |