TN TRB 8000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
TN TRB 8000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் 15000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதனை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்டமாக 9000 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருக்கும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த மார்ச் 13 முதல் தொடங்கி இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) 144 தடை உத்தரவு – ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!
அடுத்ததாக இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்காக நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் 15000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. ஆனால் இதில் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கு மட்டுமே அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டது. இதில் பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியானது.
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை – 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
இதில் குறிப்பாக சென்னையில் 7 கோடி ரூபாய் செலவில் உலகத் தரத்திலான பள்ளிகள் அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும் இவர் செய்தியாளரிடம் கூறியதாவது, நடப்பு ஆண்டில் சிறப்பாக பணிபுரிந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும் என்றும் அரசு பள்ளிகளில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் உள்ளிட்ட 34 அறிவிப்புகளை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள 15000 ஆசிரியர் காலிப்பணியிடங்களில் முதற்கட்டமாக 9000 பேருக்கு பணி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |