TN TRB 6000+ காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் !
TN TRB 6000+ காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் !
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (11) தாள்-1 மற்றும் தாள்-11 எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 13.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TET ஆசிரியர் தகுதித்தேர்வு:
அரசுப் பள்ளி ஆசிரியர் வேலைக்காக காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சி தரும் தகவலை தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ”ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு” களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த வகையில் அரசு பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளதாகவும், இந்த தேர்வை எழுத தகுதியானவர்கள் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என்று TRB தெரிவித்துள்ளது.
TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தேதி குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என வாரியம் கூறியுள்ளது.
TN TRB காலிப் பணியிடங்கள்:
இடைநிலை ஆசிரியர் பதவியில் 4,989 காலியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,087 காலியிடங்களும் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வயது வரம்பு :
ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு நிர்ணயிக்கப்படவில்லை. இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் BEd இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
தேர்வுக் கட்டணம்:
பொது பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.500, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.250 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அல்லது https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வு (17) அறிவிக்கை சார்ந்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை.9444630028, 9444630068 கைபேசி எண்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுத்து மூலமாக தெளிவுபடுத்திக்கொள்ள விரும்பினால் trbtetgrievance2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.