TN MRB தமிழக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
TN MRB தமிழக சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாகப்பட்டினம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தில் பல்வேறு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அரசுத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. ஒவ்வொரு துறை சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் குரூப் 2,2A தேர்வின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் மாற்றங்கள்!
ஆன்லைன் விண்ணப்பப் பதிவுகள் நடைபெற்று வருகிறது. மேலும் மே 21 அன்று போட்டித் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் 5831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இனி வரும் நாட்களில் அடுத்தடுத்த தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேசிய புகையிலை தடுப்பு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில் மாவட்ட ஆலோசகர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை -1; மாதம் ஊதியமாக ரூ.35,000 வழங்கப்படும். அடுத்ததாக சமூக பணியாளர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை -1; மாதம் ஊதியமாக ரூ.13,000, உளவியலாளர் -1; மாத ஊதியம் ரூ.13,000, தரவு உள்ளீடாளர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை -1; மாத ஊதியம் ரூ.10,000 பொது சுகாதாரம், சமூகபணியாளர், மேலாண்மை, சமூகவியல், மனநலவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தரவு உள்ளீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், நாகப்பட்டினம் என்ற முகவரிக்கு மார்ச் 24ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |