தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி லிமிடெட் தற்போது Chief Risk Officer பதவிக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க தகுதியுள்ள நபர்கள் ஆன்லைன் முறையில் எளிதாக விண்ணப்பிக்கலாம். மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
TMB லிமிடெட் வேலைவாய்ப்பு:
தற்போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , Chief Risk Officer பதவிக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 30.11.2022 தேதியின் படி 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த துறையில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும், இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் Chief Risk Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து எளிமையாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பாக, 07/02/2023 தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.