TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான TCS தனது வளாகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்பு
இந்தியாவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வளாகத்திற்கு வெளியே பணியமர்த்துதல் திட்டத்தின் மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐடி நிறுவனத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்ட விவரங்களின்படி, ‘விண்ணப்பதாரர்கள் BE, B.Tech, M.E, M.Tech, MCA அல்லது MSc பட்டப்படிப்பில் 2019, 2020 அல்லது 2021 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ரயில் பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு – மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை?
அதே நேரத்தில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தேர்வுகளில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்கள் 60 சதவீதமாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது தவிர, 2 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தல் முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதற்கிடையில், டிசிஎஸ் வளாகத்திற்கு வெளியே பணியமர்த்துவதற்கான தேர்வு நடைமுறை இரண்டு சுற்றுகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் என 2 தேர்வுகளை விண்ணப்பதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். இதில் எழுத்துத் தேர்வில் உள்ள திறனின் அடிப்படையில், நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர்களின் எழுத்துத் தேர்வு முடிவுகள் TCS iON மூலம் தெரிவிக்கப்படும். அந்த வகையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கான விவரங்களை பெறுவார்கள்.
விண்ணப்ப முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் https://nextstep.tcs.com/
campus/ என்ற TCS NextStep போர்ட்டலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். - விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, அவர்கள் இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
- இப்போது நிறுவனத்தால் கடைசி தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், விண்ணப்பதாரர்கள் இந்த செயல்முறையை சீக்கிரம் முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
- இது குறித்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் TCS ஹெல்ப்டெஸ்க் குழுவை ilp.support@tcs.com என்றமின்னஞ்சல் ஐடி அல்லது 18002093111 என்ற ஹெல்ப்லைன் எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
- TCS இன் https://www.tcs.com/careers/
tcs-off-campus-hiring என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிடலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |