இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) தற்போது ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவ ஆலோசகர் பதவிக்கு, RBI வங்கியில் காலியாக உள்ள 1 காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
RBI வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
RBI வங்கியானது ஒப்பந்த அடிப்படையிலான Medical Consultant பதவிக்காக காலியாக உள்ள 1 காலிப்பணியிடத்தை நிரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இப்பணிக்குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் திறமை மற்றும் தகுதி வாய்ந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படவுள்ளனர்.
இந்நிலையில் Medical Consultant பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் MBBS / Allopathy medicine போன்ற படிப்புகளில் தேர்ச்சியுடன் கூடிய மருத்துவ துறையில் 2 வருட முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000 வீதம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்த பின்பு அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 20.02.2023 ம் தேதிக்குள் அனுப்பி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.