Post Office இல் ரூ.10000 முதலீடு செய்தால் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
Post Office இல் ரூ.10000 முதலீடு செய்தால் ரூ.16 லட்சம் வரை ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் வங்கிகளை காட்டிலும் அதிகளவு லாபத்தை பெற முடிகிறது. தற்போது இதில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம், முதிர்வு தொகை உள்ளிட்ட பலன்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரெக்கரிங் டெபாசிட் திட்டம்
கொரோனா கால கட்டத்தில் பெரும்பாலான தொழில்கள் பாதிப்பு அடைந்தது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முதலீட்டில் செலுத்த தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டத்தில் முதலீடு செலுத்தி வருகின்றனர். தற்போது அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வங்கிகளை காட்டிலும் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடிகிறது. அத்துடன் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் செலுத்தி சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி (DA) & சம்பள உயர்வு – ஏப்ரல் 1 முதல் அமல்!
அத்துடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் அஞ்சல் துறை இயங்கி வருவதால் தங்களின் பணத்திற்கு முழு பாதுகாப்பும் கிடைக்கிறது. அதனால் பொதுமக்கள் மத்தியில் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அஞ்சல் அலுவலகத்தில் உள்ள ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் உள்ள பலன்களை பற்றி பார்ப்போம். இத்திட்டம் குறைந்தபட்சமாக சேமிக்க நினைப்பவர்களுக்கு மிகவும் உகந்த திட்டமாகும். இதில் ஆண்டுக்கு 5.8% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு சேமிப்பு தொகையுடன் சேமிக்கப்படுகிறது.
இந்த திட்டம் தான் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டியை தருகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடாக செலுத்தலாம். இதில் மாதந்தோறும் 10000 ரூபாய் என 10 ஆண்டுகளுக்கு செலுத்துகிறீர்கள் எனில் ஒவ்வொரு காலண்டுக்கும் வட்டி கணக்கிடப்படுகிறது. அதாவது 5.8 வட்டி கணக்கிடப்பட்டு முதிர்வு காலத்தின் முடிவில் ரூ.16 லட்சத்திற்கும் மேல் சேமிப்பு தொகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்த காலத்திலே அதிகமான தொகையை பெறுவதால் பொதுமக்கள் அதிகளவு இந்த சேமிப்பு திட்டத்தில் இணைகின்றனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |