PGIMER நிறுவனம், ” Field Investigator” பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
PGIMER நிறுவன வேலைவாய்ப்பு:
Field Investigator பணிக்கென ஒரே ஒரு காலியிடம் மட்டும் இருப்பதால் அதை நிரப்ப அறிவிப்பு ஒன்றை PGIMER நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Master Degree பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணி சார்ந்த துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Field Investigator பணிக்கு தகுதி வாய்ந்தவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 03/02/2023 தேதிக்கு முன் விரைவாக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.