Oil India Limited-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
தற்போது காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக Oil India Limited நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் Additional Director General பதவிக்கான தகுந்த பணியாளர்களை பணியமர்த்த உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சமாக 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இந்நிலையில் அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் UG /PG பட்டம் பெற்றவர்களும், மேலும் ONGC-யில் Level 8 Executive வாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 25 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு Oil India Limited நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு தகுதி மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் படிவம் பெற்று, அதனை நிரப்பி 20.02.2023 ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.