இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Director One level below Board-EDs, Two levels below Board CGM/GGMs Professor or equivalent போன்ற பதவிகளுக்காக ஒதுக்கட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்துள்ளது.
Oil India Limited-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிக்கையின் படி இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Director One level below Board-EDs, Two levels below Board CGM/GGMs Professor or equivalent Three levels below Board GMs Associate Professors or equivalent, Four levels below Board DGMs Assistant professor or equivalent போன்ற பதவிகளுக்கான, பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்ப முடிவு செய்து வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பானது 01.03.2023 தேதியின்படி 63 ஆக இருக்க வேண்டும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 30 வருட அனுபவம் கொண்ட ஓய்வுபெற்ற அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவமும், மேலும் சுற்றுச்சூழல், வனம், வனவிலங்கு மேலாண்மை ஆகியவற்றைக் கையாளும் திறன் போன்றவற்றில் அனுபவம் பெற்ற நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு Director One level below Board-EDs பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.10,000 ஊதியமும்,Two levels below Board CGM/GGMs Professor or equivalent பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.9,000 ஊதியமும், Three levels below Board GMs Associate Professors or equivalent பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.9,000 ஊதியமும், Four levels below Board DGMs Assistant professor or equivalent பணிக்கு நாள் ஒன்றுக்கு Rs.8,000 ஊதியமும் வழங்கப்படுகிறது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் மேற்கண்ட தகுதிகளை பெற்ற நபர்கள் 2 வருட ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்த பின்பு environment@oilindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01.03.2023 என்ற தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.