NPCI நிறுவனம் தற்போது Merchant Solutions RM பணிக்கென பல்வேறு காலியிடங்கள் உள்ளதால் அதை நிரப்பவேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.
NPCI நிறுவன வேலைவாய்ப்பு:
NPCI நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, Merchant Solutions RM பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது வரம்பு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் BE அல்லது B.Tech முடித்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது மற்றும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிக்கு தகுதியுடைய நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் இறுதிநாளுக்கு முன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.