NLC நிறுவனத்தில் புதிதாக 300 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.50,000/-
NLC நிறுவனத்தில் புதிதாக 300 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.50,000/-
Graduate Executive Trainee (GET) பணியிடங்களை நிரப்ப நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 300 க்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NLC நிறுவனம் |
பணியின் பெயர் | Graduate Executive Trainee (GET) |
பணியிடங்கள் | 300 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NLC நிறுவன காலிப்பணியிடங்கள்:
- Mechanical (ME) – 117
- Electrical (EEE) EE – 88
- Civil CE – 28
- Mining MN – 38
- Geology GG – 6
- Control & Instrumentation IN – 5
- Chemical CH – 3
- Computer CS – 12
- Industrial Engineering PI – 4
என மொத்தம் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன.
NLC வயது வரம்பு:
01/03/2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Graduate Executive Trainee கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Engineering டிகிரி முடித்திருக்க வேண்டும்.
Join Our TNPSC Coaching Center
GET மாத சம்பளம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 – 1,60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ஆண்டிற்கு ரூ.12.20/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்ப கட்டணம் & செயலாக்க கட்டணம் :
- UR / EWS / OBC (NCL) விண்ணப்பதார்கள் – ரூ.854/-
- SC /ST / PwBD/ Ex-servicemen விண்ணப்பதார்கள் – ரூ.354/-
Executive தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களின் இன்ஜினியரிங் மதிப்பெண்கள் மற்றும் GATE – 2022 இல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்டையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஆவணம் / சான்றிதழ் சரிபார்ப்பு / மருத்துவப் பரிசோதனைக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் https://web.nlcindia.in/rec0220225/ என்ற இணைய முகவரியில் தங்களது அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து 28.03.2022 முதல் 11.04.2022 மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.