ரூ.35,100 ஊதியத்தில் கிராம உதவியாளர் பணி – 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ.35,100 ஊதியத்தில் கிராம உதவியாளர் பணி – 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலியிடம் உள்ளதாக முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் நாளை (செப்.9) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம உதவியாளர்:
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Village Assistant பதவிக்காக 19 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தகுதிகள்:
Village Assistant பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும். நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் Village Assistant பதவிக்காக விண்ணப்பிப்பவர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பம்:
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். திறமையானவர்கள் தங்களின் Bio-data வினை தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் நாளைக்குள் (09-09-20210) அனுப்ப வேண்டும். நாளையே விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.
முகவரி:
Regional Head,
Kilvelur Taluk Office,
Nagapattinam-611 104.