தமிழக அரசில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!
தமிழக அரசில் ரூ.1,60,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள்!!
தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவை நிறுவனத்தில் (TNUIFSL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Vice President (Finance) பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNUIFSL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பதாரர்கள் 06.09.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Bachelor’s Degree with Chartered Accountancy (ACA)/ Cost Accountancy (ACMA) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Finance, Accounts, Treasury & Audit Functions, Financial Compliances & Reporting & Taxation பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.