TNPSC ஆராய்ச்சி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.36900/-
TNPSC ஆராய்ச்சி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021 – சம்பளம்: ரூ.36900/-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு பொது துணை சேவை துறையின் மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி துறையில் உள்ள Research Assistant காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை அறிவுறுத்துகிறோம்.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
Research Assistant பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TNPSC கல்வித்தகுதி:
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Economics அல்லது Econometrics அல்லது Statistics அல்லது Business Administration அல்லது Mathematics அல்லது Social work அல்லது Sociology அல்லது Anthropology அல்லது Agricultural Economics அல்லது Public Administration பாடப்பிரிவில் Post-graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆர்வமுள்ளவர்கள் 20.10.2021 தேதியில் மேலே குறிப்பிட்டபடி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்
தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.36,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,600/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு செயல்முறை :
- பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
- Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்வுகளை வரும் 22.01.2022 அன்று நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
RA கட்டண விவரம்:
- பதிவு கட்டணம் – ரூ.150/-
- தேர்வு கட்டணம் – ரூ.150/-
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வம் உடையோர் 20.10.2021 அன்று முதல் வரும் 19.11.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.