TNPSC அரசு பணியாளர்களுக்கான போட்டித்தேர்வு பட்டியல் – விரைவில் வெளியீடு!
TNPSC அரசு பணியாளர்களுக்கான போட்டித்தேர்வு பட்டியல் – விரைவில் வெளியீடு!
கொரோனா பரவல் காரணமாக தடைபட்டுள்ளதான TNPSC தேர்வுகளை மீண்டும் நடத்தும் வகையில் திருத்தப்பட்ட புதிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை விரைவில் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) செயலர் அறிவித்துள்ளார்.
TNPSC தேர்வுகள்
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான காலிப் பணியிடங்கள் பல்வேறு போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதிய பணியிடங்களை நிரப்பும் வேலையை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செவ்வனே செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட உள்ள TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த கால அட்டவணை அதற்கு முந்தைய ஆண்டிலேயே வெளியிடப்படும். அதன் படி இந்த 2021 ஆம் ஆண்டுக்கான போட்டித்தேர்வு அட்டவணைகள் கடந்த ஆண்டு வெளியானது.
அந்த பட்டியலில் குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 உட்பட 42 போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த 42 தேர்வுகளில் இதுவரை குரூப் 1 முதல்நிலைத் தேர்வு, தொழில் மற்றும் வணிகத்துறை உதவி இயக்குநர், தொல்லியல் அலுவலர் உள்ளிட்ட 7 பணியிடங்களுக்கான தேர்வுகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. இன்னும் 34 தேர்வுகள் நிலுவையில் உள்ளது. இதனிடையே தான் தமிழகத்தில் கொரோனா பேரலை தீவிரமடைந்தது. அதனால் திட்டமிட்டபடி TNPSC போட்டித் தேர்வுகளை அரசால் நடத்த முடியவில்லை.
இந்நிலையில் மீதமுள்ள போட்டித் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக TNPSC செயலாளர் உமா மகேஸ்வரி கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக TNPSC தேர்வுகளை நடத்த முடியவில்லை. இத்தேர்வுகளை மீண்டுமாக நடத்துவது தொடர்பாக TNPSC ஆணையம் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் திருத்தப்பட்ட புதிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியாகும். தமிழகத்தில் அரசுப் பணியை பொருத்தளவு 20% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதன் கீழ் அரசு அறிவித்தபடி, 1 ஆம் வகுப்பு முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ள வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.