Employment in Tamil Nadu Government Schools – 2207 Permanent Jobs
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு – 2207 நிரந்தரப்பணியிடங்கள்
முதுநிலை பட்டதாரி உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு -1 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு, ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இங்கு மொத்தம் 2207 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட கால அவகாசம் ஆனது 09.11.2021 உடன் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Post Graduate Assistants / Physical Education Directors Grade – I, Computer instructor Grade-1 ஆகிய பதிவுகளுக்கு மொத்தம் 2207 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆட்சேர்ப்புக்கு நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 40 க்குள் இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பி.எட். முடித்தவர்கள் Computer Instructor Grade I பதவிக்கு விண்ணப்பிக்கலாம். Physical Director Grade I பதவிக்கு தேசிய கவுன்சிலின் படி குறைந்தது 55% மதிப்பெண்களுடன் Bachelor of Physical Education (B.P.Ed.) or Bachelor of Physical Education (BPE) or Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education and Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Post Graduate Assistant பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்சி / எஸ்சிஏ / எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு கட்டணமாக ரூ.250/- யும், மற்ற விண்ணப்பத்தார்கள் ரூ.500/- யும் செலுத்த வேண்டும். மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36,900 -1,16,600 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்ப பதிவுகளுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்ததாலும் ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி 31.10.2021 லிருந்து 09.11.2021 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது இந்த தேதியும் நெருங்கி விட்டதால், திறமையானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Apply Online
Tag:#jobs, #permanentjobs, #tngovtjobs, #tnjobs, #trb