தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.50,000/-
தமிழக அரசில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.50,000/-
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
நிறுவனம் | TN Department of Economics & Statistics |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 30.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
Department of Economics & Statistics துறையில் அலுவலக உதவியாளர் பணிகள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணிக்கு விண்ணப்பிப்போர் 01.03.2021 அன்றைய தேதியில் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலை – கல்வித்தகுதி :
மேற்கூறப்பட்ட அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் வரை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அலுவலக உதவியாளர் ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 30.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.