-ம் கட்ட JEE Mains தேர்வு முடிவுகள் வெளியீடு – 17 பேர் 100% மதிப்பெண்கள் பெற்று சாதனை
3-ம் கட்ட JEE Mains தேர்வு முடிவுகள் வெளியீடு – 17 பேர் 100% மதிப்பெண்கள் பெற்று சாதனை
NTA தேர்வு ஆணையம் ஆனது தற்போது JEE Mains தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
JEE Mains தேர்வு 2021 :
National Test Agency எனப்படும் தேசிய தேர்வு முகமை மூலமாக வருடந்தோறும் Joint Entrance Examination (Main) எனப்படும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக தங்களின் BE/ B.Tech படிப்புகளில் சேர்ந்து கொள்ளலாம்.
இந்த வருடத்தின் கல்வி ஆண்டிற்கான April/July session 3ம் கட்ட தேர்வுகள் கடந்த 22.07.2021, 23.07.2021, 25.07.2021 & 27.07.2021 ஆகிய தினங்களில் நடைபெற்றது. இந்த தேர்விற்கு மொத்தமாக 6.5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர். கொரோனா தொற்றின் காரணத்தினால் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இத்தேர்வுகள் நாடு முழுவதும் 915 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டது. மேலும் வெளிநாடுகளிலும் 12 நகரங்களில் இந்த தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் 2021 :
தற்போது இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. இந்த தேர்வை எழுதியவர்களில் 17 மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை பெற்று உள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடுத்த 4ம் கட்ட தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.