தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2021 – 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Staff-Car Driver பணிக்கு காலியிடங்கள் உள்ளதால், அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | NIELIT |
பணியின் பெயர் | Staff-Car Driver |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
காலிப்பணியிடங்கள் :
NIELIT நிறுவனத்தில் Staff-Car Driver பதவிக்காக மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Driver வயது வரம்பு :
மேற்கூறப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவரின் வயது வரம்பானது (14.09.2021 அன்று) குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
NIELIT கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மோட்டார் வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருத்தல் அவசியமானதாகும்.
- சம்பந்தப்பட்ட பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முன் அனுபவமும் இருக்க வேண்டும்.
NIELIT ஊதிய விவரம்:
Staff-Car Driver பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சமாக ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
- Written Test (Objective Type)
- Skill Test
விண்ணப்பக்கட்டணம் :
- SC/ ST/ Women candidates/ Ex-Servicemen – ரூ. 150/-
- General மற்றும் பிற – ரூ. 300/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையோர் இப்பதவிக்கு வரும் 14.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.