Lorry owners announce strike on July 22
தமிழக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் – உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளது. அதனால் பல்வேறு கோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் முன் வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றவில்லை எனில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
போராட்டம் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால் லாரி ஓட்டுனர்கள், வாடகை கார் ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் டீசல், பெட்ரோல் விலையும் அதிகரித்துள்ளது.
அதனால் லாரி உரிமையாளர்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். டீசல் விலை உயர்வைக் குறைத்திட வேண்டும், சுங்கச்சாவடிகளை முறைப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் 18 மாநிலங்களை விட தமிழகத்தில் டீசல் விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.100, டீசல் விலை ரூ.98க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் நிறைவேற்றா விட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தென் மாநில லாரி உரிமையாளர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.