Tokyo Olympics 2021 – இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!
Tokyo Olympics 2021 – இந்திய மகளிர் ஹாக்கி அணி அசத்தல் வெற்றி!
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, அயர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் :
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் இந்தாண்டு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று உள்ளன. இந்தாண்டு இந்தியாவில் இருந்து 127 வீரர்கள் 18 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன், குத்துச்சண்டை, வில்வித்தை, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், படகு போட்டி, பளுதூக்குதல், டென்னிஸ் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தீவிர கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் இந்திய அணியினர் விறுவிறுப்பாக விளையாடி வெற்றியோ, தோல்வியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இன்று இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ரஷ்யா வீராங்கனை பெரோவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அதனை தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் அடுத்தடுத்து சுற்றுக்கு முன்னேறி வருகின்றனர். இது இந்தியாவுக்கு கூடுதல் பெருமை அளிக்கும் நிகழ்வாக உள்ளது.
அதனை தொடர்ந்து ஒலிம்பிக் ஹாக்கி மகளிர் லீக் போட்டியில் இன்று இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. முதலில் நடந்த இரண்டு லீக் போட்டியிலும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வியடைந்தது. பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் இந்திய அணி கோல் அடிக்கவில்லை. அதன் பிறகு இரண்டாவது சுற்றின் பாதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி கோல் அடித்து அயர்லாந்து அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.