தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – ஜூலை 31ல் தேர்வு!
தமிழக நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு – ஜூலை 31ல் தேர்வு!
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் உள்ள அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர் போன்ற காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் 31ம் தேதி நடக்க இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
பணியிட தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த ஆண்டு முதல் அரசு பணிகளுக்கான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதே போல், நாடு முழுவதும் பல முக்கிய தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கான பணியாளர்களை அரசு தேர்வுகள் துறை தேர்வுகள் மூலமாக தேர்வு செய்து வருகிறது. நீதிமன்றங்களுக்கான பணியாளர்கள் எழுத்துத் தேர்வு, செய்முறை, வாய்மொழித் தேர்வு என்று மூன்று கட்டங்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும், அலுவலக உதவியாளர், சுகாதார பணியாளர், தோட்டக்காரர், காவலர், இரவு காவலர், துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்களுக்கு 3,557 காலியிடங்கள் உள்ளது. இதற்காக மாவட்ட வாரியான நீதிமன்றங்களின் பணியிடங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் கடந்த 9ம் தேதி வரை பெறப்பட்டது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கோவை மாவட்டத்தில் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. கோவை, சென்னை, விழுப்புரம், கடலூர், வேலூர், சேலம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் முதல்கட்டமாக ஜூலை 31ம் தேதி அன்று எழுத்துத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு மையங்களின் விவரங்கள் அனைத்தும் தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.