மூத்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – அக்.1 முதல் தொடக்கம்!
மூத்த குடிமக்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்ப பதிவு – அக்.1 முதல் தொடக்கம்!
தற்போது வேலைவாய்ப்புகளை தேடும் மூத்த குடிமக்கள் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
வேலை வாய்ப்புகள்
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJ & E’s) மூத்த, திறமையான குடிமக்களின் முன்பணி கண்ணியத்தின் அடிப்படையில் மீண்டுமாக வேலைக்கு அமர்த்தப்படும் ஒரு நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தங்களது கண்ணியத்தின் அடிப்படையில் அதற்கான அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாக புதிய வேளைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் செயலாளர் ஆர் சுப்ரமணியம், முதியவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்து இந்த செயல்முறையை எளிதாக்குவதற்காக, இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் சங்கம் (Assocham) போன்ற பல்வேறு தொழில் சங்கங்களுக்கு மத்திய அமைச்சகம் கடிதம் எழுதி இருப்பதாக ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் பெரியவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க அரசு எடுத்திருக்கும் இந்த சேவையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கல்வி, அனுபவம், திறன்கள் மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் தங்கள் சான்றுகளுடன் விண்ணப்ப பதிவுகளை மேற்கொள்ள முடியும். எவ்வாறாயினும், இந்த போர்டல் வேலைகளுக்கு உத்தரவாதம் அளிக்காது. ஆனால் வேலை தேடுபவர்களுக்கு ஒரு பாலமாக செயல்படும் என்று மத்திய அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த SACRED போர்ட்டலை உருவாக்குதல், பராமரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக ரூ.60 கோடி செலவுடன், பரிமாற்றத்துக்காக ரூ.10 கோடியை ஒதுக்க அமைச்சு குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த போர்டல் மூத்த குடிமக்களுக்கு முழுநேர, பகுதிநேர, ப்ரீலான்ஸ் மற்றும் சார்பு வேலை மாதிரிகளை அனுமதிக்கும். இதற்கிடையில் மத்திய அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற சில முக்கிய கூட்டங்களில், ஆயுதப்படைகள், இந்திய ரிசர்வ் வங்கி, அரசுக்கு சொந்தமான வங்கிகள், முன்னாள் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களில் இருந்து ஓய்வுபெற்ற பணியாளர்களை புதிய பணிக்கு பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.