BEL நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு
BEL நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trade Apprentice Selection 2021-22 Fitter, Electrician, Electronic Mechanic and COPA பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம் | BEL |
பணியின் பெயர் | Fitter, Electrician, Electronic Mechanic & COPA |
பணியிடங்கள் | 112 |
கடைசி தேதி | 10.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :
Trade Apprentice Selection 2021-22 கீழ் Fitter, Electrician, Electronic Mechanic and COPA பணிகளுக்கு 112 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Apprentice வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் அதிகபட்சம் 21 ஆண்டுகள் வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
BEL கல்வித்தகுதி :
- Fitter, Electrician, Electronic Mechanic & COPA உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அதனுடன் NCVT சான்றிதழும் கொண்டிருக்க வேண்டும்.
- இதற்கு முன்னர் எந்த ஒரு Apprenticeship Trainingகளிலும் பங்கு கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
Apprentice ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,987/- முதல் அதிகபட்சம் ரூ.8,985/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
BEL தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI சான்றிதழின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.