HDFC வங்கியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – MSME பிரிவில் விரிவாக்கம்!
HDFC வங்கியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – MSME பிரிவில் விரிவாக்கம்!
இந்த நிதியாண்டில் HDFC வங்கியின் சுமார் 557 மாவட்ட கிளைகளில் MSME பணியிடங்களில் மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை நியமிக்க வேண்டி இருப்பதால் 500 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
HDFC வேலைவாய்ப்பு:
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனமான HDFC வங்கி, MSME துறையில் மேலும் 500 உறவு மேலாளர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த நிதியாண்டில் வங்கியின் MSME சேவைகளை சுமார் 575 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த இருப்பதால் இந்த புதிய பணியமர்த்தல் நிகழ இருப்பதாக மூத்த வங்கியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கூடுதலாக வங்கியின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSME) செங்குத்து வலிமையை 2,500 ஆக உயர்த்தவும் வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாத இறுதியை கணக்கிடுகையில் HDFC வங்கியின் ஊழியர்களின் எண்ணிக்கை 1.23 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர இவ்வங்கியின் MSME பிரிவுகள் சுமார் 545 மாவட்டங்களில் உறவு மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் 575 மாவட்டங்கள் அல்லது அதற்கு மேல் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக HDFC வணிக வங்கி மற்றும் சுகாதார நிதிக்கான மூத்த நிர்வாக துணைத் தலைவர் சுமந்த் ராம்பால் கூறுகையில், ‘HDFC வங்கியின் MSME பிரிவுகள் 575 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
அதன்படி இந்த நிதியாண்டில் 2500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த இருக்கிறோம்’ என கூறியுள்ளார். இந்த MSME பிரிவுகளின் கீழ் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையாளர் கடன்களை மறு வகைப்படுத்திய பிறகு, மார்ச் காலாண்டில் MSME புத்தகத்தை ரூ. 2,01,833 கோடியில் முடக்கிவிட்டது. சமீபத்தில் MSME பிரிவுகளை தங்கள் வருவாயின் அடிப்படையில் மறு வகைப்படுத்தி, ஊதிய பதிவு சான்றிதழை பெற வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியது. தவிர HDFC வங்கியின் MSME போர்ட்ஃபோலியோ டெக்ஸ்டைல்ஸ், பேப்ரிகேஷன்.
வேளாண், இரசாயனங்கள், நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், மருந்தகம் மற்றும் காகிதத் தொழில், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், பங்குதாரர்கள் என அனைத்து துறைகளிலும் பரவியுள்ளதாக சுமந்த் ராம்பால் தெரிவித்துள்ளார். அதாவது கடந்த இரண்டு வருடங்களாக இத்துறையில் தனது கவனத்தை அதிகரித்து வருவதாகவும், அவசரகால கடன் வரி உத்தரவாத திட்டத்தின் மூலம் நெருக்கடியைச் சமாளிக்க சிறு வணிகங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளதாகவும் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர நிர்வாகக் குழு ஏற்கனவே MSME விரிவாக்கத்திற்கான மாவட்டங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் வங்கி கிளைகளை அமைக்கப்பட்டிருப்பினும், MSME கடன் வழங்குவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி HDFC வங்கியின் 5,500 க்கும் மேற்பட்ட மொத்த கிளைகளில், 1800 க்கும் அதிகமான கிளைகள் MSME கணக்குகளில் 25%க்கும் அதிகமான கடன்களைக் கொண்டிருப்பதாகவும், அவற்றில் 4,800 வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பிரிவு சேவை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.