அரசின் வேலைவாய்ப்பு:
Ministry of Rural Development துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், Accounts Officer பணிக்காக 3 காலிப்பணியிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு பற்றிய தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக சில ஆண்டுகள் பணியாற்றியவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மாத ஊதியம் ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணியின் தகுதியை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைன் முறையில் 14 /03 /2023 என்ற தேதி முடிவதற்குள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது.