மதுரை மாவட்டத்தில் உள்ள சுகாதார சங்கத்தில் Medical Officer, Multipurpose Health Worker உள்ளிட்ட பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக DHS அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் பிப்ரவரி 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
DHS வேலைவாய்ப்பு :
மதுரை மாவட்ட சுகாதார சங்கம் Medical Officer, Multipurpose Health Worker, Multipurpose Hospital Worker போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் Medical Officer பணிக்கு 46 காலியிடங்களும், Multipurpose Health Worker பணிக்கு 46 காலியிடங்களும், Multipurpose Hospital Worker பணிக்கு 46 காலியிடங்களும் என்று மொத்தமாக 138 பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என்று அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு சார்ந்த கல்வி நிலையங்களில் பணியினை பொறுத்து 8, 10ம் வகுப்பு மற்றும் MBBS தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் Medical Officer பணிக்கு ரூ.60,000/-, Multipurpose Health Worker மற்றும் Multipurpose Hospital Worker பணிகளுக்கு ரூ.8,500/- அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு தகுந்த சான்றிதழ்களுடன் 16/02/2023 என்ற தேதிக்குள் சென்று சேருமாறு தபால் முறையில் விண்ணப்பத்தை அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.