IMPORTANT EVENTS OF MARCH 27| முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 27
முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 27
உலக நாடக தினம்-WORLD THEATRE DAY

- உலக நாடக தினம் ஆண்டுதோறும் மார்ச் 27ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
- உலக நாடக தினம் முதன்முதலில் 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- UNESCO மற்றும் சர்வதேச நாடக கல்வி நிறுவனம்(ITI) இணைந்து 1961ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் நாடக தினத்தை கொண்டாடுகின்றனர் .

- 1962 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை எழுதியவர் ஜீன் காக்டே.
- 2021 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை எழுதியவர் ஹெலன் மிர்ரென் என்ற பெண் ஆவார்.
HELEN MIRREN-ACADEMY AWARD WINNER - ஹெலன் சர்வதேச புகழ்பெற்ற திரை & தொலைக்காட்சி நடிகை ஆவார். 2007 ஆம் ஆண்டிற்கான அகாடமி விருதை தி குயின் திரைப்படத்திற்காக வென்றவர்.
முக்கிய நிகழ்வுகள் மார்ச் 18-25
வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்

- வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் மார்ச் 27, 1845 அன்று பிறந்தவர்.
- இவர் ஜெர்மனியைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார்.
- இவர் நவம்பர் 8, 1895 இல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் ஊடுகதிர் (X-கதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார்.
- இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன.
விருதுகள்
- ரம்ஃபோர்ட் விருது (1896)
- மட்டூச்சி விருது (Matteucci Medal) (1896)
- 1901 இல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.
- 2004 நவம்பரில் ரோண்ட்கனியம் தனிமத்துக்கு இவரது பெயர் வைக்கப்பட்டது.
இறப்பு
- ரோண்ட்கன் ,ஜெர்மனியில் 10 பிப்ரவரி 1923 அன்று இறந்தார்.
முக்கிய நிகழ்வுகள் மார்ச் 1-18
யூரி ககாரின் நினைவு தினம்
- யூரி அலெக்சியேவிச் ககாரின் 9 மார்ச் 1934 அன்று பிறந்தவர்.
- இவர் ரஷ்யா விண்வெளி வீரர் ஆவார்.
- விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார்.
- அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே.
- ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

சிறப்புகள்
- 2001 ஆம் ஆண்டு முதல், யூரி இரவு என்று ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.
- ககாரின் ஒரு சர்வதேச பிரபலமாக மாறியதுடன் சோவியத் யூனியனின் ஹீரோ, நாட்டின் மிக உயர்ந்த கௌரவம் உட்பட பல பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார்.
YURI GAGARIN
இறப்பு:
- 1968 ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று MiG-15 பயிற்சியளிக்கும் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானபோது ககாரின் இறந்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும் To Join Whatsapp
கிளிக் செய்யவும் To Join Facebook
கிளிக் செய்யவும் To Join Telegram Channel
கிளிக் செய்யவும் To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்