முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 10 | IMPORTANT EVENTS OF APRIL 10
முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 10
உலக ஹோமியோபதி தினம்-ஏப்ரல் 10
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் கொண்டாடப்படுகிறது.
- ஹோமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையை மருத்துவர் சாமுவேல் ஹானிமன்என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- சாமுவேல் ஹானிமன் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். இவரை போற்றும் வகையில் இவரது பிறந்தநாளை உலக ஹோமியோபதி தினமாக கொண்டாடப்படுகிறது.
மொரார்ஜி தேசாய் நினைவு தினம்
பிறப்பு :
- 29 பிப்ரவரி 1896 இல் பிறந்தார்.
சிறப்பு:
- இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்
- இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார்.
விருதுகள்:
- இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா.
- பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.
இறப்பு:
- ஏப்ரல் 10, 1995 இல் இறந்தார்.
ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்ட தினம்
- ஆரிய சமாஜம் மகரிஷி தயானந்த சரஸ்வதியால் பம்பாயில் ஏப்ரல் 10, 1875 – ல் தொடங்கப்பட்டது

வரலாறு
- ஆரிய சமாஜம் ஒரு ஏகத்துவ இந்திய இந்து சீர்திருத்த இயக்கமாக விளங்கியது .
- ஒரே கடவுள் வழிபாட்டை ஊக்குவித்தனர், சிலை வழிபாட்டை எதிர்த்தனர்.
- இந்து மாதத்தில் சீர்திருத்தத்தை ஏற்படுத்திய முதல் இயக்கம் இதுவாகும்.

- சுவாமி தயானந்த சரஸ்வதி ஸ்வராஜ் (இந்தியா இந்தியர்களுக்கே ) என்ற முதல் முழக்கத்தை 1876- இல் ஏற்படுத்தியவர்.
சிறப்பு
- மன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சுவாமி தயானந்த சரஸ்வதியை ‘நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவராக’ குறிப்பிடுகிறார்

- ஆர்ய சமாஜம் இயக்கத்தின் நூற்றாண்டு சிறப்பை குறிக்கும் வகையில் இந்திய அரசு ஏப்ரல் 11, 1975 – இல் 25 காசு தபால் தலையை வெளியிட்டுள்ளனர்.

- ஆர்ய சமாஜம் இயக்கத்தின் 125 ஆண்டு நிறைவை முன்னிட்டு 300 காசு தபால்தலையை ஏப்ரல் 5, 2000 – இல் இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது இதில் இருளிலிருந்து வெளிச்சத்துக்கு என்ற சமஸ்கிருத வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது
டைட்டானிக் கப்பல் புறப்பட்ட தினம்
- உலக புகழ்பெற்ற ஆடம்பர சொகுசு கப்பலான டைட்டானிக்கின் முதலும் இறுதியுமான பயணம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து தொடங்கியது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
For ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Join ![]() |
கிளிக் செய்யவும் |
To Join![]() |
கிளிக் செய்யவும் |
To Subscribe ![]() |
கிளிக் செய்யவும் |
How can I prepare current affairs for competitive exams?
By visiting current affairs section of dexter academy or examsdaily website, you can get regular update of current affairs.