IBPS RRB நிறுவனம் தற்போது, Division Head (Administration), Banker Faculty- Technical, மற்றும் Chief Hindi Officer பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு 4 காலியிடங்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களுக்கு கீழே காணவும்.
IBPS வேலைவாய்ப்பு:
Institute of Banking Personnel Selection ( IBPS ) நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி, Division Head (Administration), Banker Faculty – Technical, Chief Hindi Officer மற்றும் Manager & PA to Director ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. Division Head (Administration) பணிக்கு ஒரு காலியிடம், Banker Faculty- Technical பணிக்கு ஒரு காலியிடம், Chief Hindi Officer பணிக்கு ஒரு காலியிடம், Manager & PA to Director பணிக்கு ஒரு காலியிடமும் என்று நான்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் B.Tech, B.E, Post Graduate, Master’s Degree ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு Division Head (Administration), Banker Faculty- Technical, மற்றும் Chief Hindi Officer பணிகளுக்கு குறைந்தபட்சம் 56 முதல் அதிகபட்சம் 61 வரை என்றும், Manager & PA to Director பணிக்கு குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 61 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணி
மேலும் இப்பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரியில் 01/02/2023 முதல் 21/02/2023 என்ற தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.