வங்கியில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்காக HDFC வங்கியானது Credit Manager, Systems Analyst போன்ற பதவிகளுக்கான பல்வேறு காலியிடங்களை ஒதுக்கி வேலை தேடும் நபர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
HDFC-ன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
ஹவுசிங் டெவலப்மெண்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (HDFC) வங்கியில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு Credit Manager, Systems Analyst போன்ற பதவிகளுக்கான தகுந்த பணியாளர்களை கொண்டு காலியிடம் நிரப்பப்பட உள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயது வரம்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்த Credit Manager, Systems Analyst போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு சார்ந்த பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சியுடன் கூடிய பணி சார்ந்த துறைகளில் 3 வருடம் முதல் 5 வருடம் வரையிலான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு HDFC வங்கியால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு அவர்களின் தகுதி மற்றும் பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளனர். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்த பின் இறுதி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.