HCL நிறுவனம் தற்போது, Deputy Manager, Senior Manager மற்றும் Management Trainee (MT) பணிகளுக்கென்று காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு 24 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறவும்.
HCL வேலைவாய்ப்பு:
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்( HCL ) தற்போது, Deputy Manager, Senior Manager, Management Trainee (MT) மற்றும் Graduate Engineer Trainee(GET) போன்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் Senior Manager பணிக்கு 1 பணியிடமும், Deputy Manager பணிக்கு 6 பணியிடங்களும், Management Trainee(MT) பணிக்கு 13 பணியிடங்களும், Graduate Engineer Trainee(GET) பணிக்கு 4 பணியிடங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு MT மற்றும் GET பணிகளுக்கு அதிகபட்சம் 28 ஆகவும், Senior Manager பணிக்கு 47 ஆகவும், Deputy Manager பணிக்கு 40 ஆகவும் அறிவித்துள்ளது.
மேலும் Senior Manager பணிக்கு விண்ணப்பிப்போர் அரசு சார்ந்த கல்லூரியில் PG In Geology முடித்திருக்க வேண்டும். Deputy Manager பணிக்கு விண்ணப்பிப்போர் Bachelor Degree In Engineering, Technology, Arts பட்டப்படிப்பும், Management Trainee(MT) பணிக்கு விண்ணப்பிப்போர் CA/ICWA, MBA பட்டப்படிப்பும், Graduate Engineer Trainee(GET) பணிக்கு Bachelor Degree In Mechanical Engineering, Mining Machinery பட்டப்படிப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கென தேர்வு செய்பவர்களுக்கு பணியினை பொறுத்து மாதம் ரூ.40,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதி வாய்ந்தவர்கள் Computer Based Online Test மற்றும் Personal Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொழில் பிரிவின் கீழ் 28/02/2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.