பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC ), Professor, Associate Professor, Assistant Professor, Super Specialist பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதால் அதை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ESIC நிறுவன வேலைவாய்ப்பு:
ESIC ஆணையம் தற்போது, Professor, Associate Professor, Assistant Professor, Super Specialist பணிகளுக்கென்று 68 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பானது அதிகபட்சம் 66 மற்றும் 69 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Academic Qualification / MBBS என்று பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பணிக்கென்று தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,50,000/- முதல் ரூ.2,40,000/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் SC, ST, PWD மற்றும் Women பிரிவினர் தவிர மற்றவருக்கு விண்ணப்ப படிவ கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ESIC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்கு 28/02/2023 என்ற தேதி முடிவதற்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.