ESIC வேலைவாய்ப்பு 2022 – 55 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.78800/-
ESIC வேலைவாய்ப்பு 2022 – 55 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.78800/-
தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவனம் (ESIC) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Specialist Grade II பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Employees State Insurance Corporation (ESIC) |
பணியின் பெயர் | Specialist Grade II |
பணியிடங்கள் | 55 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ESIC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள தொழிலாளர்கள் மாநில காப்பீட்டு நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பில், Specialist Grade II பதவிக்கு என மொத்தமாக 55 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Specialist Grade II (Senior Scale) – 50
Specialist Grade II (Junior Scale) – 05
ESIC கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Post Graduation டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ESIC அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 வருடங்கள் பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
ESIC வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 20.04.2022 அன்றைய தினந்த்தின்படி, அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்பட்ட வயது தளர்வுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.
ESIC ஊதிய விவரம்:
Specialist Grade II (Senior Scale) பணிக்கு ரூ.78,800/- என்றும் மற்றும் Specialist Grade II (Junior Scale) பணிக்கு ரூ.67,700/- என்றும் மாத ஊதியம் தேர்வாகும் நபர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ESIC விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PwBD / ESIC Employees, Women, & Ex-Servicemen ஆகிய வகுப்பைச் சேர்ந்த நபர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து நபர்களுக்கும் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ESIC தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Language Test & Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.
ESIC விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.04.2022 ம் தேதிக்குள் வந்து சேரும்படி தபால் செய்யவும்.
ESIC Notification & Application
ESIC Official Site
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |