சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட்( DFCCIL ), TRS Controller மற்றும் General Manager பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கென 5 பணியிடங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
DFCCIL நிறுவன வேலைவாய்ப்பு:
தற்போது DFCCIL நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், TRS Controller மற்றும் General Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. TRS Controller பணிக்கு 4 பணியிடங்களும், General manager பணிக்கு 1 பணியிடமும் ஒதுக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்போர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சம் 55 என்று நிர்ணயித்துள்ளது.
மேலும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசு பணிகளில் Group A அல்லது அதற்கு சமமான பணிகளில் 17 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது PSU நிறுவனத்தில் Rs.1,00,000 – Rs` 2,60,000 என்ற ஊதியத்துடன் அல்லது அதை ஒத்த பணிகளில் 04 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Parent Pay Plus Deputation Allowance என்ற முறையில் மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும் இந்த பணிகளுக்கு தகுதியுள்ளவர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது.