CURRENT AFFAIRS – JUNE 2022
பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரோஜர் – அரிவலோ சாம்பியன்
பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் எல் சால்வடாரின் மார்செலோ அரிவலோ – ஜீன் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.பைனலில் குரோஷியாவின் ஐவன் டோடிக் – ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியுடன் மோதிய ரோஜர் – அரிவலோ இணை 6-7 (4-7), 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி கோப்பையை கைப்பற்றியது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் கார்சியா–கிறிஸ்டினா சாம்பியன்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் உள்ளூர் நட்சத்திரங்கள் கரோலின் கார்சியா – கிறிஸ்டினா மிளாடெனோவிச் இணை சாம்பியன் பட்டம் வென்றது.இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் – ஜெஸ்ஸிகா பெகுலா ஜோடியுடன் நேற்று மோதிய பிரான்ஸ் ஜோடி 2-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் 1 மணி, 44 நிமிடம் போராடி வென்று கோப்பையை
முத்தமிட்டது.
பிரெஞ்ச் ஓபன் ஆண்கள் பிரிவில் 14வது முறையாக நடால் சாம்பியன்
பிரெஞ்ச் ஓபனில் இறுதிப் போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (23வயது, 8வது ரேங்க்) உடன் நேற்று மோதிய நடால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். அவரது அனுபவ ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய ரூட் எதிர்ப்பின்றி சரணடைய… நடால் 6-3, 6-3, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று, பிரெஞ்ச் ஓபனில் 14வது முறையாக கோப்பையை முத்தமிட்டார்.இந்த போட்டி 2 மணி, 18 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலமாக களிமண் தரை மைதானங்களில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துள்ளார் ‘கிங் ஆப் கிளே’ நடால்.அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனையாளர்கள் வரிசையில் பெடரர், ஜோகோவிச் தலா 20 பட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ள நிலையில், நடால் தனது 22வது பட்டத்தை கைப்பற்றி முன்னிலையை அதிகரித்துக் கொண்டுள்ளார்.
மகரில் சந்த் கபீருக்கு குடியரசுத் தலைவர் மரியாதை, சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தைத் திறந்துவைப்பு
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், உத்தரப் பிரதேசத்தின் மகரில் உள்ள கபீர் சௌரா தாமில் சந்த் கபீருக்கு மரியாதை செலுத்தியதுடன் சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.சந்த் கபீரின் முழு வாழ்க்கை , மனித இனத்தின் சிறந்த உதாரணம் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். துறவிகள், ஆசிரியர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் தொடர்ந்து சமூக அவலங்களை நீக்கி வருவது இந்தியாவிற்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று கூறிய குடியரசுத் தலைவர், சமூகத்தால் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட துறவிகளுள் சந்த் கபீரும் ஒருவர் என்று தெரிவித்தார்.
ENGLISH
Roger wins French Open men’s doubles title
- El Salvador’s Marcelo Arivalho and Jean-Julien Roger (Netherlands) win doubles title at the French Open men’s doubles final. In the final, Roger clashed with Croatia’s Ivan Dodik – Austin Krozicek (USA) – Arivalo 6-7 (4-7), 7-6 (7-5), 6-3 to win the trophy in 3 hours.
Garcia-Christina champion at the French Open tennis women’s doubles
- Local stars Carolyn Garcia and Christina Miladenovic have won the women’s doubles title at the French Open. In the final, the
French pair of Coca-Cola and Jessica Begula clashed 2-6, 6-3, 6-2 in 1 hour, 44 minutes to clinch the trophy.
Nadal wins French Open men’s title for 14th time
- Nadal, who clashed with Norwegian Caspar Root (23 years old, ranked 8th) in the final of the French Open yesterday, has been playing aggressively since the start and accumulating points. Unable to make up for his experience, Root surrendered unopposed. Nadal won easily in straight sets 6-3, 6-3, 6-o, kissing the trophy for the 14th time at the French Open.The match ended in 2 hours and 18 minutes. With this victory, ‘King of Clay’ Nadal has once again proved his dominance on clay turf. With Federer and Djokovic in second place with 20 Grand Slam titles and 20 titles each, Nadal has increased his lead to 22nd.
President pays tribute to Chand Kabir in Makar, Chand Kabir Academy and Research Center, Swadesh Darshan Project Launched
- President Ram Nath Govind paid homage to Chand Kabir at Kabir Saura Thamil in Makar, Uttar Pradesh and inaugurated the Chand Kabir Academy and Research Center, Swadesh Darshan Project. The President described Chand Kabir’s whole life as the best example of humanity. The President said that it was fortunate for India that monks, teachers and social reformers were constantly removing social ills, adding that Chand Kabir was one of the saints who was wholeheartedly accepted by the community.