CURRENT AFFAIRS – JUNE 2022
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு ஜூலை 1 முதல் தடை
- சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பின்படி, பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவை ஜூலை 1, 2022 முதல் தடை செய்யப்படும்.
- ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது. பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதணிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கண்ணாடிகள், பிளாஸ்டிக் அல்லது பிவிசி 100 மைக்ரானுக்கு குறைவான பேனர்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ், போர்க்ஸ், கத்திகள், ஸ்ட்ராக்கள், கட்லரி மற்றும் இனிப்புப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளில் சுற்றப்படும் பிளாஸ்டிக் பிலிம்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்களாகும்.
ஜிஎஸ்டி கவுன்சில் 47வது கூட்டம்
- ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 2021, டிசம்பர் 31ம் தேதி புதுடெல்லியில் நடந்தது. பின்னர் 6 மாத இடைவெளியில் அடுத்த கூட்டம் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது, ஆனால் பல மாநில அமைச்சர்கள் வருவதால், பாதுகாப்பு காரணமாக சண்டிகருக்கு கூட்டம் மாற்றப்பட்டது.
- அதன்படி ஜிஎஸ்டி கவுன்சிலின் 47வது கூட்டம் சண்டிகரில் தொடங்கியது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார். ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதியமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இன்றைய இந்திய கல்வி-2022 என்ற மாநாட்டில் திரு தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்
- இன்றைய இந்திய கல்வி – 2022 என்ற மாநாட்டில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார்.
- அப்போது பேசிய அவர், தரமான, குறைந்த செலவில் கல்வியை அளிப்பதற்கு புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
- தேசிய கல்விக்கொள்கை தரமான கல்வியையும் வழங்குவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் திறன் கல்வியையும். ஒருங்கிணைக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருவதாக திரு தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
ENGLISH
Ban on disposable plastic from July 1
- According to the Ministry of Environment, the production, import, storage, distribution, sale and use of disposable plastics, including polystyrene and expanded polystyrene products, will be banned from July 1, 2022.
- The government has given ample opportunity to abandon disposable plastics. Plastic sticks for balloons, earrings with plastic sticks, ice cream sticks, plastic cups, plastic glasses, banners of plastic or PVC less than 100 microns, plastic spoons, forks, knives,
straws, cutlery and candy boxes, plastic bags and invitations Films are banned products.
47th Meeting of the GST Council
- The GST Council meeting was held on December 31, 2021 in New Delhi. It was later announced that the next meeting would be held in the city in 6 months’ time, but the meeting was shifted to Chandigarh due to security concerns as several state ministers were coming
- Accordingly, the 47th meeting of the GST Council began in Chandigarh. Union Finance Minister Nirmala Sitharaman presided.
State finance ministers and officials who are members of the GST Council attended.
Mr. Dharmendra Pradhan addressed the conference on Indian Education – 2022 today
- The Minister of Education and Skills Development, Mr. Dharmendra Pradhan addressed the conference on Education of India – 2022 today. Speaking at the time, he stressed the need for innovation to provide quality, low-cost education.
- He said the national education policy would also be a key factor in providing quality education. And skills education in schools and institutions of higher learning to increase employment. Mr Dharmendra Pradhan said the government was working towards
Homegrown and upgraded MK-3 light helicopter attached to Indian Coast Guard at Porbandar, Gujarat
- The domestically developed and upgraded MK-3 light helicopter was attached to the Indian Coast Guard at Porbandar, Gujarat. The event was presided over by the Director General of the Coast Guard, Mr. VS Pathania. Many military and civilian officials attended.
- This demonstrates the autonomy achieved in the areas of search and rescue and coastal surveillance. Hindustan Aeronautics has developed this upgraded lightweight helicopter. So far 13 helicopters have been gradually added to the Indian Coast Guard.