CURRENT AFFAIRS 2022
உத்தரகாண்டில் முதல் பெண் சபாநாயகராக ரிது கந்தூரி தேர்வு:
- உத்தரகாண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோத்வார் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிது காந்தூரி, முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரியின் மகள்.
- இந்நிலையில், இம்மாநில சட்டப்பேரவையில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் விலகியது.
- இதனை தொடர்ந்து போட்டியின்றி ரிது கந்தூரி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பெண் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச புகைப்பட விருதை பெறும் தமிழர் செந்தில்குமரன்:
- பிரபல போட்டோகிராபர் செந்தில்குமரன் மதுரையை சேர்ந்தவர். இவர் போட்டோகிராபி துறையில் பல அசத்தல்களை நிகழ்த்தி வருகிறார்.
- இவர் பெற்ற விருதுகளின் வரிசையில் முக்கியமான விருதுகளின் வரிசையில், 2007ம் ஆண்டு, லண்டன் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருது கிடைத்தது.
- மேலும், மற்றொரு ஐகானிக் புகைப்படமான கங்கை ஆற்றின் கரையோரம் காயப் போடப்பட்டிருந்த சேலைகளின் புகைப்படமானது வைலானது. அதை அவர் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படத்திற்கான போட்டிக்கு அனுப்பி வைத்தார்.
- இந்நிலையில், வனவிலங்கு சார்பாக அவர் எடுத்த புகைப்படத்திற்கு தற்போது ஒரு விருது கிடைந்துள்ளது. வேர்ல்டு பிரஸ் போட்டோ என்ற அமைப்பின் பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான விருதை இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதை தமிழர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்
தூத்துக்குடி உட்பட 21 இடங்களில் சைனிக் பள்ளி – ஒன்றிய அரசு ஒப்புதல்:
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உருவான இத்திட்டத்தில் முதல்கட்டமாக 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது.
- தனியார் துறையுடன் இணைந்து 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும்.
- புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 6ம் வகுப்பு முதல் இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுடன் இணைந்து சைனிக் பள்ளி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.