CURRENT AFFAIRS – 2022
பைனலிசிமா கோப்பையை வென்றது அர்ஜென்டினா
தென் அமெரிக்க, ஐரோப்பிய சாம்பியன் அணிகளுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக பைனலிசிமா கோப்பைக்கான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 3-வது ஆண்டுக்கான போட்டியில் அர்ஜென்டினா – இத்தாலி மோதின.லண்டனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதில் இரு கோல்களை அடிக்க உதவியிருந்த லயோனல் மெஸ்ஸி, சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்றுமதி – மூன்றாம் இடத்தில் தமிழகம்
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு 2021 – 22ம் நிதியாண்டில் 31.46 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 2.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழகத்தில் இருந்து ஏற்றுமதியானவை. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 8.34 சதவீதமாக உயர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
இது 2020 – 21ம் நிதியாண்டில் 1.93 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2019 – 20ம் நிதியாண்டில் தமிழக ஏற்றுமதியின் மதிப்பு 2.12 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.2021 – 22ம் நிதியாண்டில் 9.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும் 5.45 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மகராஷ்டிரா மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
கலைஞர் எழுதுகோல் விருது 2022
2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில் இதழியல் துறையில் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருதும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் 3 ஆம் தேதி கருணா நிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, கலைஞர் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி 2021 ஆம் ஆண்டிற்கான விருதாளரான மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது 2022
தமிழ்த் திரை உலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கப்படும் என தமிக அரசு அறிவித்து இருந்தது. இந்த விருது தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும், கலைஞர் பிறந்த தினமான ஜுன் 3 ஆம் தேதி அன்று வழங்கப்படும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2022-ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பல்வேறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதி புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (வயது 90) தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
ENGLISH
Argentina wins Finalsima trophy
The tournament for the Finalsima Cup has been held between the South American and European champions for the past few years. Argentina – Italy clash in 3rd year match in this category.
Argentina won the match 3-o in London. Lionel Messi, who assisted on two goals, was selected as the best player.
Exports – Tamil Nadu in third place
31.46 lakh crore worth of goods were exported from India to foreign countries in the financial year 2021-22. Of these, goods worth Rs 2.62 lakh crore were exported from Tamil Nadu. Tamil Nadu’s share of the country’s total exports rose to 8.34 per cent, ranking third.
It was Rs 1.93 lakh crore in the financial year 2020-21. The value of Tamil Nadu exports in the financial year 2019-20 was 2.12 lakh crore rupees. Gujarat topped the list with a value of Rs 9.45 lakh crore for the 2021-22 financial year, followed by Maharashtra with a net worth of Rs 5.45 lakh crore.
Kalaigar Eluthukol Award 2022
The Annual Kalaigar Eluthukol Award and the Certificate of Appreciation of Rs. 20 Lakhs. On the eve of Karuna Nidhi’s birthday on June 3, senior journalist Shanmuga Nathan has been selected as the winner of the 2021 Award on the recommendation of the
selection committee for the Kalaigar Eluthukol Award.
Kalaigar Memorial Kalaithurai Vithakar Award 2022
The Tamil Nadu government had announced that the ‘Kalaigar Memorial Kalaithurai Vithakar Award 2022’ would be given in the name of the best Tamil scholar and artist to the best lifetime achievers in the world of Tamil cinema. It has been announced that this award will be given on behalf of the Government of Tamil Nadu every year, on the artist’s birthday, June 3rd. Accordingly, the Government of Tamil Nadu has announced that the renowned narrator Arurdas (age 90) has been selected for the Kalaigar Memorial Kalaithurai Vithakar Award 2022 of the Year Award for his work on scripts for various films.