பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் தற்போது Graduate, Diploma பிரிவுகளில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.
BPCL வேலைவாய்ப்பு:
தற்போது Graduate, Diploma பிரிவுகளில் Apprentice பணிகளுக்கு 20 காலியிடங்கள் உள்ளதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வரை இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் Engineering Degree மற்றும் Diploma வில் முடித்திருக்க வேண்டும் மற்றும் இப்பணிக்கென தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.25,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Apprentice பணிக்கு தகுதியுடைய நபர்கள் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று 13/02/2023 தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.