B.E / B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு
B.E / B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிட தற்போது அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | DRDO |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 10 |
கடைசி தேதி | 15.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
DRDO காலிப்பணியிடங்கள் :
Junior Research Fellow பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
மத்திய அரசின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
DRDO கல்வித்தகுதி :
- Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering / Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech அல்லது M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் NET / GATE மதிப்பெண்களும் இன்றியமையாததாகும்.
JRF ஊதிய விவரம் :
JRF பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.10/–
- SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 15.01.2021 அன்றுக்குள் இயக்குனர், என்.எஸ்.டி.எல்., விஜியன் நகர், விசாகப்பட்டினம் – 530 027 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.