Finance and Insurance Assistant பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக சமீபத்தில் ஆக்ஸிஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விரைவாக இறுதி நாளுக்கு முன் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
ஆக்ஸிஸ் பைனான்ஸ் வேலைவாய்ப்பு:
ஆக்ஸிஸ் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனமானது, Finance and Insurance Assistant பணிக்கு 31 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18/02/1993 முதல் 18/02/2005ம் தேதிகளுக்கு இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும். அதாவது 18 முதல் 30 வயதுடையவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும் Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியம் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த தனியார் நிறுவன பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் முறையில் நியமனம் செய்யப்படுவார்கள். மேற்கண்ட தகுதிகளை கொண்ட நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 31/03/2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.