ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Aircraft Technician, Technician (Skilled) உள்ளிட்ட பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 300 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
AIESL நிறுவன வேலைவாய்ப்பு:
AIESL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில், Aircraft Technician மற்றும் Skilled Technician பணிகளுக்கென மொத்தமாக 371 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01/03/2023 அன்றைய தேதியின் படி 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும். மேலும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் எனவும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் எனவும் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10 ஆம் வகுப்பு + ITI, Diploma தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிகளுக்கென தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- வழங்கப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Test, Trade Test, Technical Assessment & Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் General மற்றும் OBC பிரிவினரிடம் ரூ.1000/- மற்றும் SC/ST/Ex-Servicemen பிரிவினரிடம் ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் முறையில் இறுதி நாளுக்குள் (20.03.2023) விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.