ரூ. 50,000/- ஊதியத்தில் SAI நிறுவனத்தில் வேலை – கேட்டரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
ரூ. 50,000/- ஊதியத்தில் SAI நிறுவனத்தில் வேலை – கேட்டரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Catering Manager பணிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு மார்ச் மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.எனவே இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை நன்கு வாசித்தபின் முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு தங்களின் பதிவுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய விளையாட்டு ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Catering Manager பணிக்கு காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டும் நிரப்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு Degree அல்லது Hotel Management, Catering Management படிப்பை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
Hotel Management, Catering Management துறையில் குறைந்தது 3 வருடம் அனுபவம் பெற்ற விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ. 30,000/- முதல் ரூ. 50,000/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு (24.03.2022) நாளை மாலை 6 மணிக்கு விண்ணப்பித்து பயனடைய தெரிவித்துக்கொள்கிறோம்.
Download Notification
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |