பெல் நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
பெல் நிறுவனத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
Project Engineer, Senior Assistant Engineer பணியிடங்களை நிரப்ப பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பெல் நிறுவன பணியிட விவரங்கள்:
- Senior Assistant Engineer – 8 பணியிடங்கள், Project Engineer – I (Electronics) – 10 பணியிடங்கள் மற்றும் Project Engineer – I (Mechanical) – 5 பணியிடங்கள் என மொத்தம் 23 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
- Senior Assistant Engineer – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Project Engineer – I (Electronics), Project Engineer – I (Mechanical) – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.03.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.