பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 4 முதல் புதிய விதிகள்!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 4 முதல் புதிய விதிகள்!
பஞ்சாப் நேஷனல் வங்கியும் பணம் செலுத்துவது தொடர்பான விதிகளை மாற்றியுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் வங்கி மோசடிகள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய விதிகள்:
இந்தியாவில் வங்கிகள் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருப்பதால் கடந்த வருடங்களில் நிலவிய ஊரடங்கு காலத்திலும் வங்கிகள் பகுதி நேரமாக இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் வங்கி பண பரிவர்த்தனைகள் பல்வேறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் 10,000த்திற்கு மேல் பணம் எடுக்கும் போது ஒடிபி கட்டாயமாக்கப்பட்டது. மெட்ரோ நகரங்களில் மாதம் 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
நாமக்கல்லில் நாளை (ஏப்ரல் 1) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதற்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பிற நகரங்களில் மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி பணம் செலுத்துவது தொடர்பான விதிகளை மாற்றி அமைத்துள்ளது. இந்த விதிமுறையின்படி வங்கிகளில் வாடிக்கையாளரின் உறுதிப்படுத்துதல் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
மேலும் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பாசிட்டிவ் பேமெண்ட் முறை கட்டாயமாக்கப்படும் என்றும் அதன்படி இனி ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலையை வழங்கினால் வாடிக்கையாளரின் உறுதிப்படுத்தல் அவசியம் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காசோலை முறை மூலம் வங்கி மோசடிகள் தடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் காசோலை வழங்குபவர், காசோலையின் விவரங்களை வங்கிக்கு SMS, மொபைல் ஆப், நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் மூலம் தெரிவிக்கலாம்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |