தேர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!
தேர்வில்லாமல் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை!
Consultant / Coordination பணியிடங்களை நிரப்ப தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் (NCRTC) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
NCRTC காலிப்பணியிடங்கள்:
தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Consultant / Coordination பணிக்கு என ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Consultant கல்வித் தகுதி:
- Consultant / Coordination பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
- ஓய்வுபெற்ற செயலக ஊழியர்கள் ரூ.47600-151100(L8) அல்லது Rs.40000-140000 (E1) ஊதிய அளவின் படி பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகுதிகள் பற்றிய விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.
NCRTC அனுபவ விவரம்:
இப்பணிக்கு Secretarial பணியில் மாநில அரசில் 25 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். Infrastructure / Industrial development authority ஆக பணிபுரிந்தவராக இருக்கும் பட்சத்தில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
வயது விவரம்:
10.03.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 65 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
NCRTC ஊதிய விவரம்:
விண்ணப்பதாரர்கள் பணியின்போது Corporation’s policy க்கு உட்பட்டு தகுதிக்கு தகுந்தாற்போல் ஊதியம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
NCRTC தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
NCRTC விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் 25.03.2022ம் தேதிக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.